கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் சுற்று ஆட்டம் ஒன்றில் முதன்முதலாக மோதிக்கொண்ட ஸ்பெயின் – மொராக்கோ அணிகள், நேற்று நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் போட்டியில் இவ்விரு அணிகளும் இரண்டாவது முறையாக மோதிக் கொண்டன.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட நேரத்தில் இரு தரப்பு வீரர்களும் கோல் எதுவும் அடிக்காததை அடுத்து, கூடுதலாக 30 நிமிடம் வழங்கப்பட்டது. அதிலும் இவ்விரு அணி வீரர்களும் ஒரு கோல் கூட அடிக்காததால் போட்டி பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு நோக்கி சென்றது.
இதன் மூலம் 2014க்குப் பிறகு உலகக் கோப்பை நாக் அவுட் சுற்று போட்டியை பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு நோக்கி கொண்டு சென்ற ஆட்டம் என்ற சிறப்பு தகுதியை இந்த போட்டி பெற்றது.
பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் மொராக்கோ அணி வீரர்கள் அப்துல் ஹமீது சபிரி, ஹக்கிம் ஜியெச், அச்ரஃப் ஹக்கிமி ஆகியோர் தலா ஒரு கோல் அடிக்க, கிடைத்த 3 வாய்ப்புகளையும் வீணடித்த ஸ்பெயின் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ரவுண்ட் ஆஃப் 16 உடன் வெளியேறியது.
இந்த போட்டியின் மூலம் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை வீழ்த்தி, முதன்முறையாக காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது மொராக்கோ அணி.