ஹரீஷ் கல்யாண் நடிக்கும் 'லப்பர் பந்து'

நடிகர் ஹரீஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘லப்பர் பந்து’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து படத்தை இயக்க உள்ளார். ஷான் ரோஸ்டன் இசையமைக்கிறார். படத்தின் போஸ்டரை பார்க்கம்போது, இது கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் போல் தெரிகிறது. லஷ்மண் குமார் தயாரிப்பில் படம் உருவாக உள்ளது.