சத்துணவுத் துறையில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு…. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

சத்துணவுத் துறையில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு…. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

சத்துணவுத் திட்டத் துறையில் காலியாக உள்ள 8,997 காலிப்பணியிடங்களைத் தொகுப்பூதியத்தில் நிரப்புவதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 8,997 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை மட்டும் மாதம் ரூ.3,000 தொகுப்பூதியத்தில் நிரப்ப அனுமதி அளிக்கப்படுகின்றது.

சமூக நல ஆணையகரத்தின் கோரிக்கையை ஏற்று இந்த அனுமதி வழங்கப்படுகிறது. தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களில் 12 மாதங்கள் திருப்திகரமாகப் பணியை முடிக்கும் நபர்களுக்குச் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

தொகுப்பூதியச் சமையல் உதவியாளர் பணி நியமனத்துக்குக் குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி என்பதில் நிர்ணயம் செய்யப்படுகிறது. சென்னையில் சமையல் உதவியாளர்களைத் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய சமூக நலத்துறையின் இணை இயக்குநர், நியமன அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார்.

தொகுப்பூதிய அடிப்படையில் உதவியாளர்கள் நியமிக்கப்படுவதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.26.99 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைச் செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *